search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வத்திக்குச்சி திலீபன்"

    முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகி இருக்கும் `தர்மபிரபு' படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
    `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `தர்மபிரபு' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும், ரமேஷ் திலக் சித்திரகுப்தனாகவும் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, படம் வருகிற ஜூன் 28-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோரும் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

    முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகும் `தர்மபிரபு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. #Dharmaprabhu #YogiBabu
    விமல், வரலட்சுமி நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

    முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.



    மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் கவனிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Dharmaprabhu #YogiBabu

    குத்தூசி படத்தில் நாயகனாக நடித்துள்ள திலீபன், யோகி பாபு பற்றி பேசும் போது, அடுத்தவங்க மேல அக்கறையோடு இருப்பது தான் யோகி பாபுவிடம் தனக்கு ரொம்பப் பிடித்தது என்று கூறினார். #Kuthoosi #Dhileepan #YogiBabu
    வத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக நடித்த திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தார். இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயம் பற்றிய இந்த படத்தில் யோகி பாபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம். யோகி பாபு தொடக்க காலத்தில் நடித்த இந்த படம் இப்போது தான் ரிலீசாகி இருக்கிறது.

    யோகி பாபு பற்றி திலீபன் கூறும்போது, “அவர் ஒரு தீவிர முருக பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்குவார்.



    எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிசியாக இருக்கிற ஒருத்தருக்கு தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்று கூறியுள்ளார். #Kuthoosi #Dhileepan #YogiBabu

    சிவசக்தி இயக்கத்தில் வத்திக்குச்சி திலீபன் - அமலா ரோஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `குத்தூசி' படத்தின் முன்னோட்டம். #Kuthuoosi #Dhileban #AmalaRose
    ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டூடியோஸ் சார்பில் எம்.தியாகராஜன் தயாரித்துள்ள படம் `குத்தூசி'.

    வத்திக்குச்சி திலீபன் - அமலா ரோஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெயபாலன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - என்.கண்ணன், ஒளிப்பதிவு - பாகீ, படத்தொகுப்பு - ஜே.வி.மணிகண்டபாலாஜி, கலை இயக்குநர் - ஸ்ரீ ஜெய்கல்யாண், பாடல்கள் - கவிஞர் அண்ணாமலை, வசனம் - வீருசரண், சண்டைப்பயிற்சி - ராஜசேகர், நடனம் - சங்கர், ராதிகா, ஒவிக்கலவை - ஏ.எஸ்.லஷ்மி நாராயணன், சிறப்பு சப்தம் - சேது, ஆடை வடிவமைப்பு - ஏ.கதிரவன், தயாரிப்பு நிர்வாகம் - ஞா.ஏழுமலை, தயாரிப்பாளர் - எம்.தியாகராஜன், இணை தயாரிப்பு - கணேஷ் ராஜா.த, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - சிவசக்தி.

    “ இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியுள்ளது.



    படம் பற்றி இயக்குநர் பேசும்  போது,

    நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான். அதை அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன் எப்படி போராடுகிறார்? என்பதே கதை. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

    காதல், ஆக்‌ஷன், எமோ‌ஷன் என கமர்ஷியலாக மக்களுக்கு பிடிக்கும் வகையில் குத்தூசி உருவாகியுள்ளது” என்றார்.

    இந்த படம் நாளை (25.1.19) திரைக்கு வருகிறது. #Kuthuoosi #Dhileban #AmalaRose

    குத்தூசி டிரைலர்:

    முத்துகுமரன் இயக்கத்தில் உருவாகி வரும் `தர்மபிரபு' படத்தின் மூலம் நடிகை மேக்னா 7 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். #DharmaPrabhu #YogiBabu #MeghnaNaidu
    விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன் ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில், இந்த படத்தின் மூலும் நடிகை மேக்னா நாயுடு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான சரவணா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். தொடர்ந்து, ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிறுத்தை, குட்டி படங்களில் குத்து பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார். அதன்பின்னர் தமிழ் படங்களில் தோன்றாத இவர் `தர்மபிரபு' படத்தில் நடிக்க இருக்கிறார்.



    இதுகுறித்து மேக்னாவிடம் கேட்ட போது, அவரும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தான் இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும். ஒரு பாடலுக்கும் நடனமாடுகிறேன் என்றார்.

    இதில் யோகி பாபு எமனாகவும், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #DharmaPrabhu #YogiBabu #MeghnaNaidu

    முத்துகுமரன் இயக்கத்தில் `தர்மபிரபு' படத்தில் எமதர்மராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் யோகி பாபு இந்த படத்திற்கான வசனங்களையும் எழுதுகிறார். #DharmaPrabhu #YogiBabu
    தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக மாறியிருக்கிறார் யோகி பாபு. அவர் தற்போது `தர்மபிரபு' என்கிற படத்தில் எமன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய பணியையும் யோகி பாபு மேற்கொள்கிறார். அதாவது முதன்முறையாக படத்தின் வசனங்களை யோகி பாபு எழுதுகிறார். 

    விமல், வரலட்சுமி இணைந்து நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் `வத்திக்குச்சி' திலீபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.



    இந்த படம் தவிர்த்து `கூர்கா', `ஜாம்பி' உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அஜித்தின் `விஸ்வாசம்', சிம்பு நடிக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்', ஜீவாவின் `கொரில்லா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திலும் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். #DharmaPrabhu #YogiBabu

    வத்திக்குச்சி திலீபன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் குத்தூசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சீனு ராமசாமி தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது என்று வருத்தம் தெரிவித்தார். #Kuthoosi #SeenuRamasamy
    காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பாராட்டுகளை பெற்ற திலீபன் கதாநாயகனாக நடிக்கும் படம் குத்தூசி. இயற்கை விவசாயத்தின் மேன்மையை பற்றி பேசும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் சீனுராமசாமி கலந்து கொண்டார். 



    விழாவில் சீனு ராமசாமி பேசும்போது,

    ‘தமிழ் மொழி மீதான பற்று குறைந்துகொண்டே வருகிறது. ஒரு மகன் அப்பாவை அப்பா என்று அழைத்தால் ‘ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறேன். ஒழுங்காக டாடி என்று கூப்பிடு என்று மகனை கண்டிக்கிறார் தந்தை. இந்த சூழலில் இந்த படத்தில் கதாநாயகி தமிழில் பேசியது ஆச்சர்யம் அளிக்கிறது. பேயையும் பிசாசையும் மாயஜாலத்தையும் நம்பி படம் எடுத்து வரும் சூழலில் விவசாயத்தை காக்க ஒரு படம் வருவது மகிழ்ச்சியை தருகிறது’ என்றார். #Kuthoosi #SeenuRamasamy #Dileepan

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

    படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 



    அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

    இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காலா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் படத்திற்கு ஆதரவு பெருகியிருக்கிறது. #Kaala #Rajinikanth
    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது.

    ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார்.

    ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் வெளியாகும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

    சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அதிகமான போராட்டக் காட்சிகள் இருப்பதாக செய்தி வந்தது பரபரப்பை கூட்டியது.

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.



    தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாத அம்பேத்கர் சிலை, புத்தர் மண்டபம் என்று ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடுகளை பல இடங்களில் வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான அடித்தட்டு மக்களின் நில உரிமையை ரஜினியை வைத்து பேசி இருக்கிறார்.

    எனவே எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வழக்கமான ரஜினி படங்களை காட்டிலும் இது குறைவு தான்.

    எனினும், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. 

    இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.

    ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

    ரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.



    ‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.

    இந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `காலா' படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கும் வத்திக்குச்சி திலீபன், படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். #Kaala #Rajinikanth #Dileepan
    வத்திக்குச்சி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து இருக்கிறார். படம் குறித்து திலீபன் பேசும் போது, 

    வத்திக்குச்சி படத்துக்குபின் குத்தூசி என்ற படத்தில் நடித்தேன். அது இயற்கை விவசாயம் பற்றிய வணிக ரீதியான படம். அது விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து படம் பண்ணபோவதாக செய்தி வந்ததும் சென்று சந்தித்தேன். வாய்ப்பு கேட்டேன். ரஞ்சித் இருக்கிறது. ஆனால் உறுதி அளிக்க முடியாதே என்று கூறிவிட்டு உடலை ஏற்ற முடியுமா? என்று கேட்டார். ஏற்ற வேண்டும் என்றார்கள். பின்னர் தேர்வின்போது ஒரு டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். ரஞ்சித் நிறைய உதவி செய்து என்னை பேச வைத்தார். கதாபாத்திரத்துக்கான பயிற்சி நடக்கும்போது தான் நான் ரஜினி சாருக்கு மகனாக நடிப்பது தெரிய வந்தது. இன்ப அதிர்ச்சி ஆனேன்.



    போட்டோஷூட்டிலேயே பார்த்துவிட்டேன். அப்போதே சின்னதாக சிரித்து நம்மை நெருக்கமாக்கினார். முதல் காட்சியில் நடிக்கும்போது தான் மிகவும் பதட்டமானேன். ஆனால் நம் பதட்டத்தை அவர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். நம்மிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்து பதட்டத்தை தணித்து நடிக்க உதவி செய்தார். ரஞ்சித்தும் மிகவும் கூல் டைப். நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் மிக பொறுமையாக கேட்டு அவருக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்.

    ரஜினியை பார்த்து வியந்த சம்பவம் ஏதாவது?

    அவரை ஒரு நடிகராக மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொழில்பக்தி என்னை வியக்க வைத்தது. 7 மணி படப்பிடிப்புக்கு 6.45 க்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதேபோல் ஒரு வரி வசனமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பார். அவரை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் முதல் படம்தான். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருப்பது யாராலும் முடியாத ஒரு வி‌ஷயம். அந்த தொழிலில் பக்தி இருந்தால் நாம் எந்த தொழிலும் வெற்றி பெறலாம் என்பதை புரிந்துகொண்டேன்.



    தாராவி மக்களின் வாழ்வியலை பேசும் படமாக இருக்கும். காலாவின் கதாபாத்திர படைப்பு வேற லெவலில் இருக்கும். ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்தும். ரஞ்சித் ரசிகர்களையும் சேர்த்தே திருப்திபடுத்தும். #Kaala #Rajinikanth #Dileepan

    ×